• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: வார ராசிப்பலன் !
Share
29°C
Chennai
scattered clouds
29° _ 29°
82%
6 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
வார ராசிபலன்

வார ராசிப்பலன் !

Rohini R
Last updated: 2026-01-24 6:41 pm
Rohini R Rohini R 42 Views
Share
Online Tamil News
SHARE

ஜனவரி 25 முதல் 31 வரை

(இவ்வார சுபமுகூர்த்த நாட்கள்)

28.01.2026 தை 14 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்(அஸ்வினி,பரணி,கிருத்திகை1-ஆம்பாதம்)

உங்கள் ராசிக்கு 10–ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய நேரம் ஆகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்கள் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொண்டு படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 30, 31.

ரிஷபம் (கிருத்திகை2,3,4-ஆம்பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம்1,2-ஆம்பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெற முடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். எந்த ஒரு விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை தற்போது பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடக் கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. மாணவ மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்- 28, 29.

மிதுனம்(மிருகசீரிடம்3,4-ஆம்பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம்1,2,3-ஆம்பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி மன அமைதியை குறைக்கும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் ஆகும். பிறரிடம் பேசுவதை தற்காலிகமாக குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தள்ளி வைக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். மாணவ மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை விட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்- 25, 26, 27.

கடகம்(புனர்பூசம்4-ஆம்பாதம்,பூசம்,ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7—ம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நெருங்கியவர்களின் உதவியால் வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்- 26, 27, 28, 29.

சிம்மம்(மகம்,பூரம்.உத்திரம்1-ஆம்பாதம்)

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய நேரம் ஆகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும் என்றாலும் சில விஷயங்களில் பிறரை நம்பாமல் நீங்கள் நேரடியாக சில காரியங்களை செய்தால் வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத காரியத்தை கூட நீங்கள் தலையிட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்கள் தேவையற்ற பேச்சை தவிர்த்துவிட்டு உங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதன் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 28, 29, 30, 31.

(சந்திராஷ்டமம்- 23-01-2026 காலை 08.33 மணி முதல் 25-01-2026 பகல் 01.36 மணி வரை)

கன்னி(உத்திரம்2,3,4-ஆம்பாதங்கள்,அஸ்தம்,சித்திரை1,2-ஆம்பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 5-ல் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உங்க ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் உதவியால் வளமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சக ஊழியர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களை கூட சுலபமாக செய்து முடிக்க முடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, கால பைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வெற்றி தரும் நாட்கள்- 30, 31.

(சந்திராஷ்டமம்- 25-01-2026 பகல் 01.36 மணி முதல் 27-01-2026 மாலை 04.45 மணி வரை)

துலாம்(சித்திரை3,4-ஆம்பாதங்கள்,சுவாதி,விசாகம்1,2,3-ஆம்பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு யோகக்காரர்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சனி 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எளிதில் சமாளித்து எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். மாணவ மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்- 25, 26.

(சந்திராஷ்டமம்- 27-01-2026 மாலை 04.45 மணி முதல் 29-01-2026 மாலை 06.31 மணி வரை).

விருச்சிகம்(விசாகம்4-ஆம்பாதம்,அனுஷம்,கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், 5-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களைப் பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து அனுகூலமான பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் ஏற்ற மிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது வெளியூர் தொடர்புகள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ மாணவியர்கள் உடன் இருப்பவர்களிடம் பேசுகின்ற போது சற்று கவனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து படிப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வரும் நாட்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்- 26, 27, 28.

(சந்திராஷ்டமம்- 29-01-2025 மாலை 06.31 மணி முதல் 31-01-2026 இரவு 08.01 மணி வரை.)

தனுசு(மூலம்,பூராடம்,உத்திராடம்1-ஆம்பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் இருப்பதாலும் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையற்ற வகையில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரம் ஆகும். பொதுவாக பிறரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தீபம் ஏற்றுவதன் மூலம் ஏற்ற மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 28, 29, 30, 31.

மகரம்(உத்திராடம்2,3,4-ஆம்பாதங்கள்,திருவோணம்,அவிட்டம்1,2-ஆம்பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். நண்பர்கள் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நேரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலமானது உங்களுக்கு உண்டு. மாணவ மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 30, 31.

கும்பம்(அவிட்டம்3,4-ஆம்பாதங்கள்சதயம்,பூரட்டாதி1,2,3-ஆம்பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். எதிர்பார்க்கின்ற பண வரவுகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் படிப்பில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் நன்மை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலமாக ஏற்றங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்- 26, 27.

மீனம்(பூரட்டாதி4-ஆம்பாதம்,உத்திரட்டாதி,ரேவதி)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11-ம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கின்ற உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு உங்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய சிறப்பான நேரமாகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்- 28, 29.

Astrologer 2
TAGGED:astrologyonline tamil newstamil news todayTamilHoroscopeToday Horoscope TamilWeeklyHoroscopeZodiacPredictions
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 25.01.2026
Next Article Today Rasi Palan-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 26.01.2026

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
stalin dmk
தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
May 7, 2026 at 12:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?