• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: வார ராசிப்பலன் !
Share
27°C
Chennai
light intensity drizzle
27° _ 26°
86%
2 km/h
Sun
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
வார ராசிபலன்

வார ராசிப்பலன் !

Last updated: 2026-02-09 10:03 am
Rohini R 33 Views
Share
Online Tamil News
SHARE

பிப்ரவரி 1 முதல்7 வரை

(இவ்வார சுபமுகூர்த்த நாட்கள்)

06.02.2026 தை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

மேஷம்(அஸ்வினி,பரணி,கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய்– சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், புதன்கிழமை முதல் லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரம் ஆகும். மாணவ மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலம் அனுகூலங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்- 5, 6, 7.

ரிஷபம்(கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய நேரம் ஆகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய நேரமாகும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நேரம் ஆகும். ஒரு சிலருக்கு சக ஊழியரினால் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. மாணவ மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை பெற முடியும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2.

மிதுனம்(மிருகசீரிடம் 3,4-ஆம்பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம்1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி மனக்கவலையை உண்டாக்கும். உடன் இருப்பவர்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும். வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள் வீண் பழிகளை சொல்லக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பு விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்- 3, 4.

கடகம்(புனர்பூசம் 4-ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் உடன் இருப்பவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். சனி பகவான் 9-ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணத்தை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அதனை எளிதில் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2, 5, 6.

சிம்மம்(மகம்,பூரம்.உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதும், வரும் புதன்கிழமை முதல் 7-ல் புதன் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் உன்னதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்ட முடியும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது சற்று குறைந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொண்டு படிப்பில் சாதிக்கக்கூடிய நேரம் ஆகும். உடன் பிறந்தவர்கள் மூலமாக ஒரு சில ஆதாயத்தை வரும் நாட்களில் பெறுவீர்கள். கால பைரவரை வழிபாடு செய்வது, வெங்கடேச பெருமாளை தரிசிப்பதன் மூலம் அனுகூலங்கள் நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 3, 4, 7.

கன்னி(உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்,அஸ்தம்,சித்திரை 1,2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கான ஆதாயத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பூர்வீக சொத்து வகையில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வதும், லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதும் அனுகூலமான பலன்களை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2, 5, 6.

துலாம்(சித்திரை 3,4-ஆம் பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய முடியும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான காரியத்தை கூட சுலபமாக செய்து முடிக்க முடியும். மாணவ மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2, 3, 4.

விருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், வரும் புதன்கிழமை முதல் 4-ல் புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாத ஒரு காரியத்தை வரும் நாட்களில் முடிக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களை வரும் நாட்களில் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். உடல் ஆரோக்கிய ரீதியாக இந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ மாணவியர்கள் சூழ்நிலையை எளிதில் புரிந்து கொண்டு படிப்பில் சாதிக்கக்கூடிய நேரமாகும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, ராகு கால நேரத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 3, 4, 5, 6.

தனுசு(மூலம்,பூராடம்,உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரவுகள் உங்களுக்கு கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல லாபங்கள் கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். குறிப்பாக எடுக்கின்ற பணிகளை ஒரு குறித்த நேரத்தில் முடிப்பதில் தேவையற்ற தடங்கல்கள் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 5, 6, 7.

(சந்திராஷ்டமம்- 31-01-2026 இரவு 08.01 மணி முதல் 02-02-2026 இரவு 10.47 மணி வரை)

மகரம்(உத்திராடம் 2,3,4-ஆம்பாதங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி 3-ல் வலுவாக இருப்பதும், குருபகவான் வக்ர கதியில் இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசி மற்றும் 2-ம் வீடுகளில் சுக்கிரன், புதன் இந்த வாரத்தில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒரு சில நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது மிக மிக நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணி தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தை கூட நீங்கள் கையாண்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய நேரம் ஆகும். மாணவ மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வதும் அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2, 7.

(சந்திராஷ்டமம்- 02-02-2026 இரவு 10.47 மணி முதல் 05-02-2026 அதிகாலை 04.20 மணி வரை)

கும்பம்(அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம்,பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருக்க வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதும், உற்றார் உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பதும் தற்போதைக்கு நல்லது. தொழில் வியாபாரத்தில் தற்சமயத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு சில முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க கூடிய நேரம் என்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களை பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 1, 2, 3, 4.

(சந்திராஷ்டமம்- 05-02-2026 அதிகாலை 04.20 மணி முதல் 07-02-2026 பகல் 01.22 மணி வரை).

மீனம்(பூரட்டாதி 4-ஆம் பாதம்,உத்திரட்டாதி,ரேவதி)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11–ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை வரும் நாட்களில் பெற முடியும். உங்களுக்கு தொழில் ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் மன நிம்மதியுடன் எதிலும் செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உடன் பிறந்தவரிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்கள் கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொண்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 3, 4, 5, 6.

(சந்திராஷ்டமம்- 07-02-2026 பகல் 01.22 மணி முதல் 10-02-2026 அதிகாலை 01.11 மணி வரை).

Astrologer 2
TAGGED:AstrologyTamilHoroscopeThisWeekMuhurthamTamilAstrologyTamilJothidamWeeklyRasiPalanWeeklyTamilHoroscope
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan ,Online Tamil News இன்றைய ராசிப்பலன் & 01.02.2026
Next Article Today Rasi Palan-Online Tamil News இன்றைய ராசிப்பலன் & 02.02.2026

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?