ஒரு தனியார் நிகழ்ச்சில் பங்கேற்ற இயக்குநர் பார்த்திபனிடம் திரையில் ஒவ்வொரு புகைப்படங்களாக காட்டி, அவர்களைப் பற்றி மனதில் தோன்றும் விசயங்களை சொல்ல வேண்டும் என்று கேட்க அது மாதிரியே அவரும் சொல்லி இருக்கிறார்.
கடைசியாக த்ரிஷா படம் வந்திருக்கிறது. பொன்னியன் செல்வன் படத்தில் நடித்த குந்தவை பாத்திரத்தில் இருந்த புகைப்பட வந்ததால், பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் ‘’குந்தவை.. குந்தவை..’’ என்று உரக்க குரல் எழுப்பினர்.

அதைக்கேட்டதும் பார்த்திபன் தனக்கு வழக்கமான தமிழில் பேசிவிட்டார். ‘’குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சனைகளை அது உண்டாக்காமல் இருக்கும். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்’’ என்று பேசினார் பார்த்திபன்.
நடிகையுடன் விஜய்க்கு தொடர்ப்பு இருக்கிறது என்று சொல்லி சங்கீதா விவாகரத்து கோரியிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத்திருமண விழாவிற்கு நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் விஜய் வந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பார்த்திபன் பேசியது அரங்கத்தில் இருந்தவர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.

இதைக்கண்டு கடுப்பான த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பார்த்திபன் மீது ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார். ‘’ஒருவரிடம் மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக அவர் பேசுவது எல்லாம் புத்திசாலித்தனமாகவோ நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தையே காட்டும். அறிவற்று பேசும் தரம் தாழ்ந்த வார்த்தைகள் யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவரை விடவும் அப்படி பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்’’ என்று வெடித்திருக்கிறார்.



