இன்றைக்கு திருச்சியில் சொல்வதற்கு முன்பாகவே நேற்றைக்கே தனது எக்ஸ் தளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது’’ என்று பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ. பரப்புரைக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியபோது, ‘’ஆடியில் காவிரி பெருகுவது போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அலை பெருகி வருகிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தை கொண்டு வரும் என்று மக்கள் நினைக்கின்றனர்’’ என்றார்.

ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை. அடுத்த ஆட்சியும் திமுக ஆட்சிதான் என்பது உள்ளூர் மட்டுமல்லா உலக மகா கணிப்புகளிலும் கூட உறுதியாகிவிட்ட நிலையில், ஆட்சி மாற்றம் என்பதை கட்டமைக்க படாத பாடு படுகிறார் பிரதமர் மோடி.
சொன்னதை செய்வது தேசிய ஜனநாயக கூட்டணி என்கிறார் மோடி. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தரமுடியாது என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி சொன்னதா? ஏனென்றால் அதைத்தான் என்.டி.ஏ. ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

ஆடிப்பெருக்கு போன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை இருப்பதாக கூறுகிறார் பிரதமர் மோடி. உண்மையில் ஆடிப்பெருக்கு யாருக்கு? ஆடிப்போயிருப்பது யார்? என்பது தமிழக கள நிலவரம் காட்டுகிறது. இதனால்தான் பஞ்சப்பூர் மேடையில் தேசிய ஜனநாயக கூட்டக்கட்சித் தலைவர்களின் முகத்தில் கலவரமே குடி கொண்டிருக்கிறது. உண்மையில் ஆடிப்பெருக்கு யாருக்கு? என்பதை அறியாதவர் அல்ல மோடி . திமுக கூட்டணிக்கு தமிழகமெங்கிலும் அடிக்கும் ஆதரவு அலை கண்டு ’ஆடி’ப்போன மோடியின் சமாளிப்புகள், பஞ்சப்பூர் மேடை வார்த்தைகள்.