[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிய பண்ருட்டியார்!

T.R.Kathiravan
Last updated: 2026-02-18 5:46 pm
T.R.Kathiravan T.R.Kathiravan
panruti ramachandran ops

ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு தூக்கிவிட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அதிமுக பிளவுபட்டதில் இருந்தே ஓபிஎஸ்க்கு பக்கபலமாக இருந்து வந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.  இதனால் அவரை அதிமுகவில் இருந்து நீக்கினார் எடப்பாடி.   

ஓபிஎஸ் அணி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்தார் பண்ருட்டியார்.  கடைசியில் என்ன ஆனதோ தெரியவில்லை.  ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டார் பண்ருட்டியார்.  

இப்போது அவர், ’எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தனிக்கட்சியும் தொடங்கிவிட்டார்.  ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவார் என்று பண்ருட்டியாரும் அதற்கேற்ற முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். ஆனால்,  மறுபடியும் மறுபடியும் எடப்பாடியிடமே சென்று ஓபிஎஸ் மன்றாடிக் கொண்டிருப்பதால் கடுப்பாகி நானே தனிக்கட்சி தொடங்கிவிடுகிறேன் என்று முடிவெடுத்திருகிறார்  பண்ருட்டியார் என்றே தெரிகிறது.  பாமவில் இருந்து விலகியபோது ‘மக்கள் நல உரிமைக்கழகம்’ தனிக்கட்சி தொடங்கிய பண்ருட்டியார், இப்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி மீண்டும் ஒரு தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார்.

kanchipuram ops

இந்த கட்சியில் ஓபிஎஸ் அணியில் இருந்த காஞ்சிபுரம் மாவட்ட தலைவருக்கு முக்கிய பொறுப்பு வழங்குவதாக பண்ருட்டியார் உறுதி அளிக்க,  தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் கூட முடிவெடுக்காமல் திணறிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் பின்னால் நிற்பது புத்திசாலித்தனம் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்சின் உரிமை மீட்புக்குக்ழுவில் இருந்து விலகி இருக்கிறார்.  விரைவில் இவர்கள் பண்ருடியாரின் புதிய கட்சியில் இணைய உள்ளனர்.

TAGGED:ADMKepsonline tamil newsopspanrutiramachandranpmktamil news todaytamilnadu
Previous Article uddhav thackeray ’இந்தியா’வுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வலுக்கும் குரல்கள்!
Next Article Daily Horoscope 19 February 2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன் –  19.02.2026
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account