[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன்- 19.04.2026

Krish Radhai
Last updated: 2026-04-19 6:43 pm
Krish Radhai Krish Radhai
Tamil horoscope today

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெற அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

கடகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 12.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு தடைகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது, வெளியாட்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.

தனுசு

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டா-கும். எந்த செயலிலும் நிதானம் தேவை.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

TAGGED:April 19 HoroscopeAstrology TamilDaily HoroscopeHoroscope Todayonline tamil newsRasi PalanTamil HoroscopeTamil Jothidamtamil news todayZodiac Predictions
Previous Article eps gopi டேய்.. டீவில போட்டு விட்டுடுவேன் காரித்துப்பிடுவாங்க – செங்ஸ்க்கு எடப்பாடி எச்சரிக்கை
Next Article edappadi palanisamy கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரகசிய ஆவணங்கள் எடப்பாடி கைக்கு வந்தது எப்படி?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account