[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

தவெக MLAவின் அடாவடி! 863 மனமகிழ் மன்றங்களையும் மூட வலுக்கும் கோரிக்கை

T.R.Kathiravan
Last updated: 2026-06-11 11:49 am
T.R.Kathiravan T.R.Kathiravan

ஒரு பக்கம் மதுக்கடைகளை மூடுவதாக சொல்லிவிட்டு மறுபக்கம் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் தவெக அரசு புதிய மது கடைகளை திறக்கின்றது என்று குற்றம் சாட்டி இருந்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

 அன்புமணியின் இந்த குற்றச்சாட்டிற்கு காரணம் பென்னாகரம் சம்பவம் தான் காரணம்.   பெண்ணாகரம் மாங்கரையில் டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில் அதை மனமகிழ் மன்றமாக திறந்ததற்கு பென்னாகரம் தவெக எம்எல்ஏ கஜேந்திரனின் ஆதரவு இருக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

 இந்நிலையில் இந்த மனமகிழ் மன்றம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள 863 மனமகிழ் மன்றங்களையும் நிரந்தரமாக மூடக்கோரி இருக்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே. சி. பழனிசாமி.

’’தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் ரெஸ்ட்ரோ பார்களின் உரிமங்களை ரத்து செய்து அவற்றை மூட வேண்டும் என்று தவெக ஆட்சி அமைந்த முதல் வாரத்திலிருந்தே நான் தொடர்ந்து ஒரு வலியுறுத்தி வருகிறேன்,

ஏனெனில், இவற்றில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பினாமிகள் மூலம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், முறைகேடுகள் நடந்தாலும் காவல்துறையால் சுதந்திரமாக ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதன் விளைவாக, சட்டவிரோத மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கூட மது விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம் சென்னை கோயம்பேட்டில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒரு சிறுமிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக வெளிவந்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இத்தகைய குளறுபடிகளுக்கான முக்கிய காரணம், பல மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கடைகளைப் போலவே செயல்பட்டு வருவதுதான். உண்மையிலேயே விஜய் மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், முதல் கட்ட நடவடிக்கையாக தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 863 மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்து, அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும். ’’

TAGGED:cmvijayonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Previous Article பாரதிராஜா மனைவியிடம் கங்கை அமரன் ஆவேசம்! ராதிகா சமாதானம்
Next Article இதைச்சொல்ல நீங்கள் யார்? – சிபிஎம்  சண்முகத்தை விளாசிய கொங்கு ஈஸ்வரன்
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account