[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

 ஏமாற்றாதே ஏமாற்றாதே! விவசாயிகளை ஏமாற்றாதே! முதல்வருக்கு எதிராக முழக்கம்

T.R.Kathiravan
Last updated: 2026-06-16 1:25 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

’’சொன்னீங்களே சொன்னீங்களே… செஞ்சீங்களா செஞ்சீங்களா..

முதல்வர் ஐயா முதல்வர் ஐயா… உங்கள் வாக்குறுதி என்ன ஆச்சு

பொய் வாக்குறுதி பொய் வாக்குறுதி

நியாயம்தானா முதல்வரே!

 ஏமாற்றாதே ஏமாற்றாதே! விவசாயிகளை ஏமாற்றாதே!

நிறைவேற்று நிறைவேற்று! வாக்குறுதியை நிறைவேற்று!

சொன்னீங்களே சொன்னீங்களே விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று

 சொல்வது ஒன்று செய்வது ஒன்று 

நியாயம்தானா முதல்வரே!

தள்ளுபடி செய் தள்ளுபடி செய் 

விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்

 வஞ்சிக்காதே வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே!’’

-தமிழகம் வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி கூறி இருந்தார் விஜய்.  ஆனால் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பயிர் கடனை அவர் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.

 கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயிர் கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி என்றும் , 75 ஆயிரத்துக்கு மேல் பயிர் கடன் வாங்கியவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

 இதை கண்டித்து வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி சேலம் மாவட்டம் நல்லா கவுண்டம்பட்டியில் தமிழக விவசாயிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் தான் மேற்கண்ட முழக்கங்களை எழுப்பினர்.

TAGGED:cmvijayonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Previous Article master magendran நான் தற்குறி அல்ல, அவர்கள்தான் தற்குறிகள் – மக்கள் அவதியை உணராத மகேந்திரன்
Next Article கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய மாணவி ஜெனிபர் – துணை மாவட்ட ஆட்சியர்!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account