திண்டிவனத்தில் கடந்த 14ம் தேதி அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது, எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதில் ஒரு குற்றச்சாட்டுதான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் ஆதிக்கம்.
கட்சியின் சீனியர்கள் சொல்வதை பழனிசாமி கேட்பதில்லை. குடும்பத்தினரும், கட்சிக்கு பணம் கொடுப்பவர்களும் சொல்லுவதைத்தான் கேட்கிறார் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
குடும்பத்தினர் ஆதிக்கம் என்ன?
எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் கூட, கட்சியின் முக்கிய முடிவுகளில் அவரின் ஆலோசனைதான் இடம்பெறுகிறதாம்.
பழனிசாமி மனைவியின் சகோதரர் வெங்கடேசன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்தான் என்றாலும் சேலம் மாவட்ட செயலாளர் அளவுக்கு செல்வாக்கு செலுத்தி வருகிறாராம்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏ.டி.சசிபிரபு, பழனிசாமியின் உறவினர். இவரால்தான் செங்கோட்டையன் அதிமுகவை விட்டு வெளியேறும் சூழல் வந்தது என்கிறார்கள்.
இவர்களைத் தவிர இன்னும் சில பழனிசாமியின் உறவினர்கள் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவது கட்சியினருக்கு உறுத்தலாக இருக்கிறது என்கிறார்கள் ராயப்பேட்டை எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தினர்.