[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
கருத்துக்கணிப்பு

மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறது அமமுக!

Rohini R
Last updated: 2026-01-28 12:23 pm
Rohini R Rohini R
AMMK joins NDA-TTV Dhinakaran announcement

என்டிஏ கூட்டணியில் அமமுக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.(Online Tamil News)

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக–அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமமுகவை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இன்று தமிழக மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த 80 அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், என்டிஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உள்ள கூட்டணியில் இணைவது குறித்து அமமுகவில் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அந்தக் கருத்துகளும் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், அமமுக நேரடியாக அதிமுகவுடன் அல்லாமல், என்டிஏ கூட்டணியின் ஒரு பகுதியாக இணைகிறது என பாஜக தரப்பின் விளக்கத்தை அமமுக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

[forminator_poll id=”22892″]
TAGGED:AMMK joins NDAAMMK political moveBJP AIADMK allianceNDA alliance Tamil Naduonline tamil newsTamil Nadu Assembly electiontamil newstamil news updatesTTV Dhinakaran announcement
Previous Article rn ravi தலையங்கம் : ஆளுநரின் வேலை என்ன?
Next Article பக்கவேர்கள் உதிரும்  காலத்திலும் படபடக்காத ஓபிஎஸ்!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account