[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கருத்துக்கணிப்பில் திமுகவுக்கே வெற்றி ! – தவெக, அதிமுக நிலை என்ன ?

Rohini R
Last updated: 2026-01-30 12:18 pm
Rohini R Rohini R
Tamil Nadu Election 2026-DMK leads opinion poll-Online Tamil News

பொதுவாக மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அல்லது அதன் பின்னர் தான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்தும் “மூட் ஆஃப் தி நேஷன்” ஆய்வு ஆண்டுக்கு இரு முறை, ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியாகி, நாட்டின் அரசியல் மனநிலையை மதிப்பீடு செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, இன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்தினால் கூட தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும் என்றும் 45% வாக்குகள் உடன் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. (Online Tamil News)

அதிமுக – பாஜக நிலை !

மறுபுறம், கடந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இணைந்து சுமார் 41% வாக்குகள் பெற்றிருந்தன. ஆனால் இப்போது கூட்டணியாக களம் இறங்கினாலும், அவர்களின் வாக்கு சதவிகிதம் சுமார் 33% அளவிலேயே இருக்கும் எனவும், 3 அ.தி.மு.க கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிலை !


அதே நேரம் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய்யின் தவெக கட்சி தேர்தலில் 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, கட்சியின் உள்கட்டமைப்பு கணிப்புகளில் அதிகமான வாக்கு சதவிகிதம் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், வெளிப்புற ஆய்வுகள் இதைவிட குறைவாகவே மதிப்பிடுகின்றன.மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஈர்ப்பை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

TAGGED:2026 ElectionsADMKBJPDMKonline tamil newsOpinion போல்Tamil Nadu PoliticsToday tamil newstvkvijay
Previous Article Delayed arguments in politics-Online Tamil News தலையங்கம் : தாமதிக்கப்படும் வாதங்கள்
Next Article thiruma vck நானும் ராமதாசும் பிரிந்தபோது நடந்தது என்ன? திருமா பரபரப்பு
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account