• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: மோ(ச)டி அரசு அம்பலம்
Share
29°C
Chennai
mist
29° _ 27°
87%
1 km/h
Sat
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: மோ(ச)டி அரசு அம்பலம்

Last updated: 2026-02-23 7:23 am
Spark Desk 63 Views
Share
india-ai-impact-summit-robot-dog-controversy
SHARE

பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து பொய்யையும் புனைவையும் வரலாறாகவும் அறிவியலாகவும் முன்வைக்கும் முயற்சிகள் இந்திய அளவில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது விநாயகருக்கு யானைத் தலையை வைத்ததுதான் என்றார். அவர் கோடு போட, பலரும் ரோடு போட்டார்கள். ஆனால், அதில் கருங்கல் ஜல்லியோ, தார்-சிமெண்ட்டோ இல்லை. மண்புழுதிதான் பரவியது.

முதல் டெஸ்ட் ட்யூப் பேபி மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரம் என்றார் ஒருவர். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை என்றும் இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம்தான் முதல் விமானம் என்றும், விண்வெளிக்கு சென்றவர்கள் அமெரிக்கர்களோ, ரஷ்யர்களோ அல்ல புராணத்தில் வரும் அனுமார்தான் என்றார் இன்னொருவர். பிரதமர் மோடியின் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.வின் முதலமைச்சர்கள் பலரும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் அரசியல் பலமே மதவாதமும் அதனுடன் ஒட்டிய பொய்யும் புரட்டும்தான். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படுத்தபடவில்லை. நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்தான் அங்கே ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தூணில் விளக்கு ஏற்றியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையிலும், தீபம் ஏற்ற தி.மு.க. அரசு அனுமதிக்கவில்லை என்று தேசிய அளவிலான ஊடகங்கள் வாயிலாகப் பொய்யைப் பரப்பினார்கள் பா.ஜ.க.வினர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த மாணவி இறந்த நிலையில், மதமாற்ற நெருக்கடி காரணமாகத்தான் அந்தப் பெண் இறந்தார் என பா.ஜ.க. தலைவர்கள் விஷத்தைப் பரப்பி தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்கப் பார்த்தார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. முழுமையாக நடந்த விசாரணைக்குப் பிறகு, மாணவியின் மரணத்தில் மதமாற்ற நெருக்கடி எதுவுமில்லை என்று அண்மையில் சி.பி.ஐ. தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

மதவாத அரசியலுக்காகப் பரப்பப்படும் பொய்கள்தான், புராணங்களை ஆதாரமாக முன்னிறுத்தும் வேலையையும் செய்கிறது. அத்துடன், குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த மாநிலத்தை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் பாருங்கள் என்று வாட்ஸ்ஆப்பிலும் சமூக வலைத்தளத்திலும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கட்டடங்களையும் பாலங்களையும் சாலைகைளையும் பரப்பி, பொய்யான பிம்பத்தை உருவாக்கி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். பின்னர்தான், அவையெல்லாம் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்கிற உண்மை வெளிவந்தது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் உள்பட எதிலுமே பா.ஜ.க. தரப்பிலிருந்து உண்மையே வெளிவந்தது கிடையாது. எல்லாமே பொய்களும் வதந்திகளும்தான்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாநாடு பா.ஜ.க. அரசு எந்தளவுக்கு மோசடி செய்யும் என்பதை உலக அளவில் அம்பலப்படுத்தி இந்தியாவைத் தலைகுனிய வைத்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் நடந்து கொண்ட ஏ.ஐ. மாநாட்டை பிரதமர் மோடியின் இமேஜ் டெவலப்மென்ட்டுக்காகப் பயன்படுத்துவதற்கான நிகழ்வாகவே பா.ஜ.க. அரசு செயல்பட்டது. பல நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வல்லுநர்களும் தங்களுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், உள்ளே நுழைவதற்கான அனுமதிகூட கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே விமர்சிக்கும் நிலை உருவானது.

மோ(ச)டி அரசின் சிகரமாக, அந்த ஏ.ஐ. மாநாட்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தின் கல்கோத்தியா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோபோ நாய் என அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கிருந்தவர்கள் கலாய்த்து சிரித்தனர். காரணம், அது சீனா உருவாக்கிய ரோபோவாகும். புராண-பொய்ச்சுருட்டு கதைகளை அறிவியல் என்று சொன்னது போல, அடுத்த நாட்டுத் தயாரிப்பை தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களின் தயாரிப்பாகக் காட்ட நினைத்தது உத்தரபிரதேச பல்கலைக்கழகம். அது உலக அளவில் அம்பலமாகி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவை மட்டுமின்றி, சொந்த அறிவையே உலகாளவிய விஞ்ஞானிகள் சந்தேகப்படவும், கேலி செய்யவுமான அசிங்கமான நிலையை உருவாக்கிவிட்டது பா.ஜ.க.வின் போலிப் பெருமை முயற்சி.

இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக அறிவியல் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வித்திட்டவர் முதல் பிரதமர் நேரு. செயற்கை நுண்ணறிவுக்கு முன்னோடியான கணினித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவர் அவரது பேரனான முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. நேரு மீது பழி போடுவதும், காங்கிரஸ் ஆட்சியை வாரிசு என்றும் வசைபாடும் பா.ஜ.க. அரசு இந்தியாவின் இத்தனை ஆண்டுகால பெருமையை சிதைத்து சீரழித்து, உலக நாடுகள் மத்தியில் நம்மை தலைகுனிய வைத்துள்ளது.

TAGGED:ai summitBJPIndiaModi
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Rasi Palan 23.02.2026, இன்றைய ராசிப்பலன்-23.02.2026      
Next Article T20 World Cup 2024 டி20 உலகக் கோப்பை: இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?