[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் ?

Rohini R
Last updated: 2026-02-02 3:03 pm
Rohini R Rohini R
எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் ?

சமீபத்திய ஒரு சர்ச்சையான வழக்கில், அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 2017‑ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும், அவரது அந்த வருட இஸ்ரேல் பயணத்துக்கும் தொடர்பான சில மின்னஞ்சல் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் உலக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனால், தற்பொழுது இந்தியாவில் பெரும் சமூக மற்றும் அரசியல் விவாதம் உருவாகியுள்ளது. இதற்கு எதிராக, மத்திய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (Congress) இந்த விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு நோட்டீஸ் ஒன்றை மக்களவை முதல்வர் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது, எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் எப்படி வந்தது, அது உண்மையா அல்லது தவறா என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். அதே நேரம், இந்த தகவல்களின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டதா, மற்றும் எப்ஸ்டீனின் ஆவணங்கள் இந்திய அரசுடன் தொடர்புடையவையா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்க்கு மத்திய வெளியுறை அமைச்சகம் (MEA) முன்பு கூறியது, மின்னஞ்சலில் பிரதமர் மோடி மற்றும் அவரது 2017‑இல் இஸ்ரேல் பயணம் குறித்து சில குறிப்புகள் இருக்கலாம் என்றும் ஆனால் அதற்குப் பிறகு வந்தவை அனைத்தும் உண்மையற்ற, அவமதிப்பான கருத்துக்கள் என்று தெளிவுபடுத்தியது.(Online Tamil News)

TAGGED:CongressEpstein Filesindia newsInternational NewsIsrael Visit 2017Jeffrey EpsteinMEAonline tamil newsParliamentary DebatePM Modipolitical controversyTamil latest newstamil news today
Previous Article vijay video விஜய் இதுவரை பேட்டி அளித்திருக்கிறாரா? இல்லையா?
Next Article Online Tamil News மற்றும் பலர் பட்டியலில் அதிமுகவை சேர்த்த விஜய்!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account