இந்திய அணியின் நட்சத்திர வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கி தனது நெகிழ்ச்சியான வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா நள்ளிரவு நேரங்களிலும் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அயராது உழைத்த மைதானப் பணியாளர்களுக்கு (Groundstaff) உரிய அங்கீகாரம் வழங்குவதாக அவர் அப்போதே உறுதியளித்திருந்தார்.
தற்போது ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், தான் கொடுத்த அந்த வாக்கை மறக்காமல் மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை ஹர்திக் நேரில் வழங்கி கௌரவித்துள்ளார். ஒரு கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கு பின்னால் திரைமறைவில் உழைக்கும் ஊழியர்களைக் கண்டுகொண்டு, இவ்வளவு பெரிய தொகையை ஒரு வீரர் தனிப்பட்ட முறையில் வழங்கியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தருணத்தில் தனது அடுத்த இலக்கு குறித்துப் பேசிய ஹர்திக், இந்திய அணிக்காக இன்னும் 10 ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாண்டியாவின் இந்த செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும், இவரது ரசிகர்கள் இவரது செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.(Online Tamil News)