மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. அவர், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்திய பெண் குறித்து, மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இப்படி பேசினால் அவர் வி… என்று சொல்லி இருந்தது தவெகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இதற்கு விஜய், ‘’இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் விமர்சித்திருக்கிறார். இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறியிருந்தார். மேலும், டிஜிபி அலுவகத்திற்கு நேரில் சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்தார் விஜய்.

அனாலும் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை. சரியாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தன் கருத்தில் உறுதியாக இருந்த பொன்ராஜ், விஜய் மன்னிப்பு கேட்டால் தான் மன்னிப்பு கேட்க தயார் என்று சொல்லி இருக்கிறார்.
’’நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :
1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?
2) எனக்கு என்புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

3) குப்பை கூட்டிடுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசிய பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே – அதை கூட ரசித்துக் கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?
4) உங்களை அரசியல் ரீதியாக நான் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இருக்கிறது என்று திமுக போபியா பிடித்து, எதைச் சொன்னால் பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?
5) இன்று காலையில் இருந்து இப்போதுவரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.
அரசியலில் நான்கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் இப்படியா வசை பாடுவது.

நான் பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade. எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்புகேளுங்கள்.
உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இளைக்கப்படும் பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.
உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாயம் கேட்ட உங்க கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதற்கு மன்னிப்பு கேளுங்கள்.
இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.’’



