• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Iran attacks
    உலகம்
    ஈரான் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த 12 நாடுகள் வலியுறுத்தல்!
    2026-03-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
52%
8 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1

Last updated: 2026-05-01 8:14 am
Spark Desk 74 Views
Share
Labor Day ,
SHARE

ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான சிந்தனைகளும் செயல்களும் மாறுபடக்கூடியவை. முந்தைய தலைமுறையின் பார்வையிலிருந்து இளைய தலைமுறை சிலவற்றில் வேறுபட்டு நிற்கும். நவீனத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இளையோரின் எண்ணப் போக்கு குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தள மெய்நிகர் வாழ்க்கைக்கும், மெய்யான உலக நடப்புக்குமான வேறுபாடுகளை அதிகமாகக் காண முடிகிறது.

தமிழ்நாட்டில் மே 1 என்றால் சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர் ‘தல
’ அஜித் பிறந்தநாள் என்பதாகவே கடந்த 15 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருக்கிறது. அஜித் நல்ல நடிகர், செல்வாக்கு மிகுந்த நடிகர், நடிப்புக்கு அப்பாற்பட்ட தனித் திறமை கொண்ட நடிகர், ரசிகப் பட்டாளம் கொண்ட நடிகர் என்பவை அவரது சிறப்புகள். அதனால், அவரது பிறந்தநாளை தல நாளாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் அதே நாளை உழைப்பாளர் தினமாக-தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறது.

மே1ஆம் நாளில் ஹேப்பி தல பர்த்டே என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போல, ஹேப்பி லேபர் டே என்று பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள். தொழிலாளர் தினம்-உழைப்பாளர் தினம் என்பது வாழ்த்து பரிமாறுகிற நாள் மட்டுமல்ல, அது உரிமைகளை நினைவுபடுத்தி மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் நாள்.

பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு உலகில் மன்னராட்சிக்கு எதிரான ஆட்சிமுறைகள் உருவாகி, ஜனநாயகம் மேம்படத் தொடங்கிய நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த பார்வைகளும் மேம்பட்டன. கார்ல் மார்க்ஸின் கம்யூனிசத் தத்துவம், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த அறிவியல்பூர்வமான தீர்வுகளை முன்வைத்தன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொழிலாளர்களுக்கான இயக்கங்கள் உருவாகின. சிகாகோ நகரில் உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் அதன் காரணமான உயிர்ப்பலிகளும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுதான் மே1ஆம் நாள், தொழிலாளர் தினமாக உருவெடுக்க காரணமாக இருந்தது.

சோவியத் ரஷ்யாவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி, சீனா உள்ளிட்ட நாடுகளில் உருவான கம்யூனிச அரசாங்கங்களின் விளைவாக 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கம்யூனிசக் கொள்கையின் தாக்கம் பெரும்பாலான நாடுகளின் நீடித்தது. அதன் விளைவாக தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் உருவாகின. ஒரு நாளின் 24 மணி நேரமும் உழைப்பு என்ற பெயரால் கசக்கிப் பிழியப்படுவதற்கு மாறாக, 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் அவரவர் விருப்ப வாழ்வு என்ற வேலைக்கட்டமைப்பு உருவானது. இந்தியாவில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதை சட்டப்பூர்வமாக்கினார் முதல் சட்ட அமைச்சரும், அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் முன்னின்றவருமான அண்ணல் அம்பேத்கர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெயர் பெற்ற சிங்காரவேலர், சென்னையில் மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினார். அவர் பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதுடன், குடிஅரசு இதழில் முற்போக்கான கட்டுரைகளை எழுதியவர். பெரியாரும் உழைப்பாளர்கள் நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி, தனது இயக்கத்தின் சார்பில் அனைவரையும் கொண்டாடச் செய்தவர்.

தமிழர்கள் தங்களின் அடையாளமாக தை 1ஆம் நாள் பொங்கல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், உலக அடையாளமான மே 1ஆம் நாள் தொழிலாளர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அதனை செயல்படுத்தியவர் பெரியார். தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளான தை 1 பொங்கல் நாளும் உழைப்பைப் போற்றுகிற நாள்தான். உள்ளூர் உழைப்பையும் உலகளாவிய உழைப்பையும் உணர்ந்து போற்றிய தலைவர்களாக பெரியார், அண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.(Online Tamil News)

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மே 1ஆம் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இது தொழிலாளர்களுக்கு கிடைத்த முக்கியமான உரிமையாகும். மில்லினியத்திற்குப் பிறகு தொழிலாளர் நிலை என்பது மாற்றம் கண்டுள்ளது. பழைய முதலாளி-தொழிலாளி, பண்ணையார்-கூலியாள் என்ற நிலையைக் கடந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் உலகமாக மாறியுள்ள நிலையில், இந்தக் காலத்திற்கேற்றவாறு நிறுவனத்தின் பணியாளர்களுக்கான உரிமைகள், ஊதியம், பணி பாதுகாப்பு ஆகியவை குறித்த புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் நாளாக மே 1 அமைய வேண்டும்.

எந்த வகையில் பார்த்தாலும் எல்லா காலத்திற்குமான ‘தல’யாய நாள்தான் மே-1.

TAGGED:Ajith KumarAmbedkarHistoryLabor DayMay Dayonline tamil newsPeriyarSocial Media CultureTamil Nadutamil news todayWorkers RightsYouth Perspective
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Daily Horoscope இன்றைய ராசிப்பலன்-01.05.2026
Next Article Daily Horoscope Tamil , இன்றைய ராசிப்பலன்-02.05.2026

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?