ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் பலர் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையாற்றாமல் இருந்து வந்தனர். இது மிகவும் கவலைக்குரியதாக இருந்தது.
இந்த நிலை இப்போது மாறி இருக்கிறது. மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்து வருகின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இன்று 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. வாக்கு வித்தியாசன் 11.27 சதவிகிதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதில் இளம் வாக்காளர்கள், அதாவது முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 14,59,039 பேர் ஆவர். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் செய்கின்றனர் என்பதையே காட்டுகிறது வாக்கு வித்தியாசம். தேர்தல் ஆணையத்திற்கு இது பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.



