பதவி மற்றும் அதிகார மோகத்தால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏக்களும், சிட்டிங் எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியை தவெகவில் இணைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் மீதான அதிருப்தியினால் இன்றும் அவரது கட்சி பிரமுகர்கள் தவெகவில் இணைந்தனர். இதில் ஒரு பரபரப்பாக பழனிசாமியின் உறவினரே தவெகவில் இணைந்தார்.
ஏன் தவெகவில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘’நானும் சிலுவம்பாளையம்தான். இபிஎஸ் எனக்கு பெரியப்பாதான்; ஆனா, விஜய்யைத்தான் பிடிச்சிருக்கு. அதனாலதான் தவெகவில் இணைந்துள்ளேன்’’ என்கிறார் மேனகா பாலகிருஷ்ணன்.
பனையூரில் பரபரப்பை ஏற்படுத்திய இபிஎஸ் உறவுக்கார பெண் மட்டுமல்லாது அதிமுகவினர் இன்றும் தவெகவில் இணைந்துள்ளனர்.