[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்

T.R.Kathiravan
Last updated: 2026-06-19 3:18 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க உதகை மாவட்ட நீதிபதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

9 ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகி வந்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் அண்மையில் ராஜினாமா செய்துவிட்டனர்.  இதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

மேலும், கொடநாடு  வழக்கில் தீபு, சந்தோஷ், சதீசன், வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில் ஜூலை 17க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்.  இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ராஜினாமாவை அடுத்து புதிய நியமனத்திற்கு கால அவகாசம் கோரிய நிலையில் ஒத்திவைப்பு நிகழ்ந்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.  இதில் தொடர்புடையவர்கள் பலரும் அடுத்தடுத்து மரணம் அடைந்து இந்த வழக்கில்  புதிய சந்தேகங்களை எழுப்பியது.

9 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.

TAGGED:ADMKepsjayalalithaakodanadukodanadu caseonline tamil newstamil news todaytamilnadu
Previous Article இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
Next Article menaka balakrishnan edappadi இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account