சட்டப்பேரவை நேரலை விவகாரத்திலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்று மாடல் அரசு என்பதை நிரூபித்திருக்கிறது தவெக அரசு.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டண தள்ளுபடி உள்ளிட்ட பலவற்றில் சொல்வது ஒன்று செய்வது ஒன்று மாடல் அரசாக செயல்பட்டு வரும் தவெக அரசு, சட்டப்பேரவை நேரலை விவகாரத்திலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்று மாடல் அரசு என்பதை நிரூபித்திருக்கிறது

சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கொடுத்த வாக்கை முதலமைச்சர் விஜய் காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பெருமிதம் தெரிவித்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான இன்றைய விவாதத்தின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் உங்க நியாயமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.



