தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் உரையின் போது மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி நடத்துவதாக முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய ஆதரவு அளித்த கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் இது குறித்து பேசிய போது, ’’தமிழக வெற்றி கழகத்திற்கு நாங்கள் ஆதரவு தராமல் இருந்தால் பத்தாம் தேதி பதவியேற்பு விழா நடந்து இருக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் வரவேண்டுமே தவிர குடியரசுத்தலைவர் ஆட்சி வரக்கூடாது என்று நினைத்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்தோம்.
ஒரு வேளை அன்று இருந்த சூழ்நிலையில் நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் பத்தாம் தேதி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்திருக்க முடியாது. பத்தாம் தேதிக்கு பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கும். குடியரசு தலைவர் ஆட்சி மூலம் மறைமுகமாக பாஜக உள்ளே வந்துவிடும் என்ற அச்சத்தால் தான் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழக வெற்றி கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளார்.



