ஆரம்பத்தில் இருந்தே அதிமுக என்று சொல்வதையே தவிர்த்து வருகிறார் தவெக தலைவர் விஜய். ’’மற்றும் பலர் ‘’ என்றே சொல்லி வருகிறார்.
சென்னையில் நடந்த கடைசி நாள் தேர்தல் பரப்புரையில் விஜய், ‘’ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரவே மாட்டாராம். இத யாரு சொல்றா? மற்றும் பலர் கட்சியில் ஒருத்தர் இருக்காருல்ல… 10 தடவ தோத்துப்போனாருல்ல… இன்னமும் திருந்தாத ஒருத்தரு.. அவரு சொல்றாரு. அய்யா அனுபவசாலி அவர்களே… உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

சேலத்துக்கு பக்கத்துல இருக்குற பகுதியிலேயே போய் பதுங்கிக்காம தமிழ்நாட்டுல வேற ஏதாவது ஒரு தொகுதியில நின்னு உங்களால ஜெயிச்சி காட்ட முடியுமா? சாரி, சாரி.. முதல்ல நிக்க முடியுமா? முதல்ல அத செஞ்சிட்டு அப்புறமா இந்த விஜய்ய பத்தி பேசுங்க பாஸ். சும்மா நசநசன்னு.

சொந்த தொகுதியிலேயே தோத்துடுவோமுன்னு தெரிஞ்சுதான் நம்ம சின்னத்தையே திருடுனவர்தானே.. 55 வருச பல்லாங்குழி பாப்பா…? ’’ என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.



