[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
vijay sangethaa
தமிழ்நாடு

சங்கீதா வழக்கில் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு ஏன்?

T.R.Kathiravan
Last updated: 2026-04-20 11:58 am
T.R.Kathiravan T.R.Kathiravan

சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கில்  விஜய்யின் கோரிக்கையை நிராகரித்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்.

நடிகர் விஜய் லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழச்சி சங்கீதாவை காதலித்து 1999ல் திருமணம் செய்துகொண்டார்.  சங்கீதா இந்து என்பதால், விஜய் கிறிஸ்துவர் என்பதால் இரு மத முறைப்படியும் இவர்களது திருமணம் நடந்தது.  இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். மகன் திரைத்துறையில் இயக்குநராக உள்ளார்.  மகள் லண்டனில் படித்து வருகிறார்.

நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ம் ஆண்டு முதல் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் வசித்து வந்தனர்.

இந்நிலையில், திருமணமாகி 22 ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 24 அன்று மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீது பிப்ரவரி 26ம் தேதி விசாரணை நடந்து அதன்படி ஏப்ரல் 20ம் தேதி அன்று விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம்.

இன்று இந்த வழக்கில் விசாரணை நடந்தபோது,  காணொளி காட்சி மூலம் விஜய் ஆஜராவதாக அவரது வழக்கறிஞர் குமரேசன் சொல்ல,  முதற்கட்ட விசாரணை என்பதால் நீதிபதி சசிகலா அதை ஏற்க மறுத்துவிட்டார்.  ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு, மே4ம் தேதி தேர்தல் ரிசல்ட் என்று வரிசையாக நெருக்கடிகள் இருப்பதை வழக்கறிஞர் குமரேசன் சொல்ல,  ஜூன் 15ம் தேதி அன்று விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி சசிகலா.

TAGGED:ADMKonline tamil newssangeethavijaytamil news todaytamilnadutvktvkvijayvijayvijay sangeetha
Previous Article Israel Gaza war, இன்றைய ராசிப்பலன்- 20.04.2026
Next Article சாதி, மதமற்றவர் பார்த்திபன் என சான்றிதழ்- நீதிமன்றம் உத்தரவு
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account