நாடோடி மன்னன் படத்தில் திமுக கொடி இருந்ததால் சென்சார் சர்டிபிகேட் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். தலைவா பட பிரச்சனையில் விஜய் கையை கட்டி நின்றது போல் நிற்கவில்லை. சொத்தை எல்லாம் விற்று படத்தை எடுத்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்படி இருந்தும் சென்சார் சர்டிபிகேட் கொடுக்க வில்லை என்றால் மவுண்ட் ரோட்டில் வைத்து பிலிமை கொளுத்துவேன் என்று தில்லாக சொன்னார் எம்.ஜி.ஆர். அவர் எங்கே இந்த காமெடி பீசு விஜய் எங்கே? என்று பேசினார் நடிகர் சத்யராஜ்.
வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த சத்யராஜ் மேலும், ‘’திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் அதை மாற்ற வேண்டும். நல்லா இருக்குற இடத்தை மாற்றுவார்களா?

கவுண்டமணி ஒரு படத்துல பேசியிருப்பார். ‘அட எகிறுதுங்கோ..’ என்று பேசியிருப்பார். அது போல திமுக கூட்டணிக்கு வெற்றி எகிறுதுங்கோ. அட எகிறுதுங்கோ…மேட்டர் எகிறுதுங்கோ.
எடப்பாடி என்னமோ விழுந்தாரு.. சரியா கால் கிடைக்கல.. அதனால டேபிளுக்கு கீழே தவழ்ந்து போனாரு.. நல்ல வேளை டேபிளுக்கு கீழே இருந்தவர் வேகமா எழுந்திருச்சிருந்தா தலை நங்குன்னு அடிச்சிருக்கும்.
கருப்பு சட்டையை போட்டு காவி சட்டையை கழற்ற வைத்தவர் ஸ்டாலின்.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரைக்கும் நான் அதிமுகவுக்கு வாக்களித்தேன். அவருக்கு பிறகு நான் உதயசூரியனுக்குத்தான் வாக்களித்து வருகிறேன். இப்போது இருக்கும் அதிமுக எம்.ஜி.ஆர். அதிமுக அல்ல. இது அமித்ஷா அதிமுக. அதனால் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம். ’’ என்று பேசி கூட்டத்தினரை கலகலப்பாக்கினார்.



