ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதம்பூரின் ராம்நகர் பகுதியிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று, ககோர்ட் கிராமம் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் இதுவரை 21 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மலைப்பாதையில் அதிக வேகத்துடன் சென்றதும், பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்ததும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.(Online Tamil News)


