திமுகவா? தவெகவா? என்ற குழப்பத்தில் உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
தேர்தல் முடிவுகளால் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியில் சண்முகம் பின்னால் வந்துவிட்டார் விஜயபாஸ்கர். இதில் தகுதி நீக்க ஆயுதத்தை பழனிசாமி எடுத்ததால் சண்முகம் பின்னால் நின்ற வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலரும் பழனிசாமியிடமே சரணடைந்துவிட்டனர்.
சண்முகமும் , விஜயபாஸ்கரும் மட்டும் பழனிசாமியிடம் சரணடையாமல் உள்ளனர். இதில் சண்முகம் அதிமுகவில்தான் இருப்பதாக சொல்லி வருகிறார். ஆனால் அவர் தவெக செல்லவிருப்பதாக வெள்ளமண்டி நடராஜன் சொல்கிறார்.

இதில் விஜயபாஸ்கர் மீண்டும் அதிமுக செல்ல விரும்பாமல் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் திமுகவில் இணைவதா? இல்லை, தவெகவில் இணைவதா? என்ற குழப்பத்தில் உள்ளார். இரு கட்சிகளிடமும் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
மாவட்ட செயலாளர், மீண்டும் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே வேட்பாளர் என்று 2 நிபந்தனைகளை வைக்கும் விஜயபாஸ்கர் மீது இருக்கும் வழக்குகளை காரணம் காட்டி அவரை தவெகவில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டுவதாக தகவல். இதனால் அவர் திமுகவில் சேருவதற்கே அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல்.



