ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிமுகவில் முதன்மை இடத்தில் இருந்தார் பூங்குன்றன் சங்கரலிங்கம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அப்படியே இந்த நிலைமை தலைகீழாகிவிட்டது. அதிமுகவில் உறுப்பினர் அட்டை பெற கூட பூங்குன்றனால் முடியவில்லை. பல முறை முயற்சித்தும் பலரின் முட்டுக்கட்டையால் தனக்கு அதிமுக உறுப்பினர் அட்டை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
அவர் இப்போது தவெகவின் வெற்றியை பாராட்டி இருக்கிறார். ‘’ எத்தனையோ அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்நாளில் போராடிப் பெற நினைக்கும் ஒரு மாபெரும் வெற்றியை, த.வெ.க-வின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடக்கத்திலேயே பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர்கள், இப்பொழுதுதான் தங்களின் அரசியல் பாடத்தைக் கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். பயிற்சி பெறுவதற்கு முன்பே வெற்றி கிடைத்துவிட்டது என்பதால், உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
எடுத்தவுடனேயே எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுவிட முடியாது. களத்தில் இறங்கி வேலை செய்யச் செய்ய, அனுபவம் கிடைக்கக் கிடைக்க, உங்களுக்கும் அரசியல் நுணுக்கங்கள் புரியத் தொடங்கும். தினமும் நாளிதழ்களைப் படிக்கத் தவறாதீர்கள். உலகிலும், தமிழகத்திலும், உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் தெரிந்து கொள்ளுங்கள்’’என்கிறார் பூங்குன்றன்.
அது மட்டுமல்லாமல் த.வெ.க மேலும் வலுவடையச் சில கூடுதல் ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார். இதையெல்லாம் வைத்து அவர் தவெகவுக்கு தாவுகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
.



