• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08
    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29

    அண்மைச் செய்திகள்

    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    2026-06-08
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    2026-06-08
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
Share
39°C
Chennai
overcast clouds
39° _ 38°
43%
1 km/h
Tue
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடுக்ரைம்

கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்

kovai sulur
Last updated: 2026-05-23 4:43 pm
T.R.Kathiravan 48 Views
Share
SHARE

கோவை மாவட்டம் சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கதி தமிழகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.  கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற வழக்கில் கைதாகி இருக்கும் கொடூர கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிற முழக்கங்கள் வலுக்கின்றன. 

sulur3

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் : ‘’கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.  இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு,  கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க – சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ’’

sulur2

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ’’கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. 

சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.

பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.

sulur

இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,  குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். ’’

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ‘’தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு – தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

sulur girl

கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே  கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்   வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.’’ 

திமுக கனிமொழி:  ‘’கோவை –  சூலூர் அருகே 10 வயது சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

கே.அண்ணாமலை: ‘’கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று,  தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.  


கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். ’’

பாமக தலைவர் அன்புமணி : ‘’கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி  அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

anbumani nda

முந்தைய திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 27 ஆயிரம் போக்சோ சட்டப்படியான குற்றங்கள் உள்பட மொத்தம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்தன.  அதே போன்ற நிலை இனியும் தொடராமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான  த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அத்துடன்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி,  தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ’

TAGGED:ADMKBrutal Murder of Girl in Coimbatore: Leaders Condemnedapadipalanisamyepskanimozhikovaionline tamil newssulurtamil news todaytamilnaduttvdinakaranUdhayanidhi Stalin
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article sulur3 தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
Next Article dharma muneeswaran2 தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் குற்றவாளி

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

martin
மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
Jun 9, 2026 at 3:05 pm
aadhav arjuna speech
தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
Jun 9, 2026 at 10:32 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?