திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற கூட்டணிக்கட்சிகள் தவெகவின் பெரும்பான்மையை நிரூபிக்கும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்ததும், வெகுண்டெழுந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, ’’ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!!’’ என்று கூறி இருந்தார்.

இன்று விசிகவும், முஸ்லீம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் இணைந்திருக்கும் நிலையில், ’’முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!’’ என்று ஆத்திரப்பட்ட ஆ.ராசா,

’’என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”!அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? ’’என்று கேட்கிறார்.



