தவெகவில் இளந்தலைமுறையினர் அதிக அளவில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றனர். இதில் அமைச்சரவையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் உள்ளனர்.
தவெக அமைச்சரவையில் 6 பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 6 பேர் 35 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 9 பேர் 45 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இரண்டு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தவெக அமைச்சரவையின் மிக இளம் வயது அமைச்சராக உள்ளார் கமலி. அவருக்கு வயது 28 ஆகும். இவர் கால்நடைத்துறை அமைச்சராக உள்ளார். அவிநாசி தொகுதியில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகனை தோற்கடித்தவர். 81,469 வாக்குகள் பெற்று 12,734 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் வென்றவர்.
இவரைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ரமேஷும் 30 வயதுக்குட்பட்டவர். இவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் 1,03,235 வாக்குகள் பெற்று 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி வென்றவர்.



