விவசாயிகள் என்றைக்குமே மன நிறைவுடன் இருந்தது இல்லை. விவசாயம் செய்து அதை அறுவடை செய்வதற்குள் செத்துப் பிழைக்கிறார்கள். அறுவடை செய்வதற்குள் மழை வெள்ளம் வந்து பாழ்படுத்து விடுகிறது. அறுத்து நெல்லையும் அரசு வாங்குவதற்குள் மழை பெய்து நெல்லும் முளைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடுகிறது. இதனால்தான் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டுத்துறை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் விளையாட்டுத்தனமான பேச்சு விவசாயிகளை கொதித்தெழ வைத்திருக்கிறது. அவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு:
’’விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமான துறை விளையாட்டுத்துறை. ஏனென்றால் ஒரு விளையாட்டு வீரன் காலையில் 5 மணிக்கு எழுந்து மைதானத்தில் இருக்க வேண்டும். 3 மணி நேரம் கடுமையான பயிற்கள் எடுக்க வேண்டும். 40 நிமிசம் தொடர்ச்சியாக ஓட வேண்டும். திடீர் திடீரென்று மலை மேலும், படிக்கட்டுகள் மீதும் ஓட வைப்பார்கள். இத்தனை பயிற்சிகள் செய்தால் கால் வலி, உடல் வலி, சோர்வு, தூக்கம் வரும்.

பயிற்சியால் காலையிலேயே 3000 கலோரிகல் உடலில் இருந்து போயிருக்கும். வியர்வை வந்துகொண்டே இருக்கும். இதோடு காலையில் 10 மணிக்கு வகுப்பறையில் அமர வேண்டும். அதனால்தான் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களை ஒரே மாதிரியாக நினைக்கக்கூடாது.
ஒரே வகுப்பில் அமர வைக்கக்கூடாது. நன்றாக படிக்கும் மாணவர்களுடன் விளையாட்டில் ஈடுபடும் மானவர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. விளையாட்டு மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்’’ என்றார்.



