1993ம் ஆண்டில் நடந்தது போன்று முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் என்கிறார் அதிமுக எம்.பி. இன்பதுரை.
சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க பல கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்தனர்.
இதில் குதிரை பேரம், ஆள்கடத்தல், ஷோபாவுக்குள் பணம் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விஜய் வீட்டிற்குள் முகத்தை மூடிக்கொண்டு சென்ற நபர் யார்? அவர் மூலம்தான் குதிரை பேரம் நடந்ததா? என்பது குறித்து விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக எம்பி இன்பதுரை, ‘’நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர்விஜய் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது’’ என்கிறார்.



