தேர்தல் நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனால் மக்கள் பார்ப்பார்கள். அது நமக்கு சாதகமாக அமையும் என்று திமுகவா நினைக்கும்? பாஜகவா நினைக்கும்? தவெகதானே நினைக்கும்.
இளைஞர்கள் எல்லோரும் டிவிகே பின்னால் இருக்கிறார்கள் என்று மீடியாக்கள் சொல்கின்றன. உண்மை என்ன என்பது மே4ல் தெரிந்துவிடும்.
ஜனநாயகன் லீக் ஆனதற்கு காரணம் திமுக சதி, பாஜக சதி என்று பேசுகிறார்கள். விஜய் வெளியே வந்தா திமுக சதி, வெளியே வரலேன்னா பாஜக சந்தின்னு பேசுறாங்க. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தான் ஜனநாயகனை லீக் செய்தார் என்கிறார் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜுனாவை பொறுத்தவரையிலும் தூக்கத்தில் எழுப்பி எது கேட்டாலும் நான் இல்லை.. நான் இல்லை.. என்றுதான் சொல்லுவார். நான் அவனில்லை பட ஹீரோ மாதிரி எல்லாவற்றுக்கும் நான் அவனில்லை என்று தப்பித்துக்கொள்வார்.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஜனநாயகன் படத்தை தன் வீட்டில் போட்டுப்பார்க்க எடுத்துச்சென்றார். அப்போதுதான் படம் லீக் ஆகியிருக்கிறது என்கிறார். ஜனநாயன் என்ன ஓட்டல் சாப்பாடா? பார்சல் செய்து எடுத்துச்சென்று சாப்பிடுவதற்கு. பாட்டி வடை சுட்டு கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஜனநாயகன் பாரீனில் இருந்து லீக் ஆகி இருக்கிறது. போலீசில் புகாரளிக்க வேண்டியதை விட்டுவிட்டு அமைச்சர் மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று ஆவேசப்பட்டார்



