பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரு, நடிகருமான தக்காளி சீனிவாசன் மறைந்தார்.
இவர்கள் வருங்காலத்தூண்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார் தக்காளி சீனிவாசன். பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பூ அதன் பின்னர் நாளை மனித படத்தை தயாரித்தார். அடுத்து அதியச மனிதன், ஜென்மநட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தது உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

சூரசம்ஹாரம், சிறையில் சில ராகங்கள், நாளை மனிதன், ஜென்ம நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சீனிவாசன் என்ற பெயரில் அப்போது சினிமாவில் நிறைய பேர் இருந்ததால், பெயருக்கு முன்னால் அடைமொழி வைக்க நினைத்தார். இவர் பார்ப்பதற்கு தக்காளி போன்று இருந்ததால் பலரும் தக்காளி என்று சொல்லி வந்தனர். அதனால் அதையே அடைமொழியாக்கி விட்டார்.
கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்தார். ஆதரவற்றோருக்கான் ஆசிரமம் ஒன்றையும் அங்கே நடத்தி வந்துள்ளார். சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மறைந்தார்.



