• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: பணமும் இல்லை.. பண்பும் இல்லை
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
52%
8 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: பணமும் இல்லை.. பண்பும் இல்லை

Spark Web Desk
Last updated: 2025-03-11 10:18 am
Spark Web Desk Spark Web Desk 118 Views
Share
Dharmendra Pradhan
SHARE

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கான ரூ.2152 கோடி ரூபாயை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதனடிப்படையிலான மும்மொழிப் பாடத்திட்டத்தையும் ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டிற்குரிய தொகையை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டி, மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்காததால் நிதி அளிக்கவில்லை என்றார்.

தமிழ்நாடு எந்த வகையில் அரசியல் சட்டத்தை மீறியிருக்கிறது எனக் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அரசியல் சட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்று எந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது?” என்றும் கேட்டார். மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை. தேசியக் கல்விக்கொள்கையின் அடிப்படையிலான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேருவதாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பிப்ரவரி 2024ல் கடிதம் எழுதியிருந்தார் என்றும், ஆனால், தற்போது அதை மறுக்கிறார்கள் என்றும், தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், மார்ச் 10 அன்று நாடாளுமன்றத்தில் சொன்ன தர்மேந்திர பிரதான், தி.மு.க. எம்.பிக்களைப் பார்த்து, “நீங்கள் நேர்மையற்றவர்கள், நீங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். நீங்கள் நாகரிகமற்றவர்கள்” என நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் என்பவர்கள் அந்தந்த மாநில மக்களின் பிரதிநிதிகள். அவர்களை நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிடுவது, அந்த மாநில மக்கள் மீதான விமர்சனமாக அமையும். உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்தை விமர்சிக்கும் வகையில் பண்பற்ற செற்களைப் பயன்படுத்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களில் உடனடியாக இறங்கினர் தி.மு.க.வினர். பின்னர், நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான் அந்த சொல்லைத் திரும்பப் பெற்றார். ஆனால், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைந்து, அதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்த தி.மு.க. தற்போது இரட்டை வேடம் போடுவதாகவும், முந்தைய முடிவை மாற்றிய அந்த சூப்பர் சி.எம். யார் என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தின் மூலமே வெளிப்படுத்தி, மும்மொழிப் பாடத்திட்டத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்தி, தமிழ்நாட்டுக்குரிய வரிப்பங்கீட்டையும், கல்வி நிதியையும் தாருங்கள் எனக் கோரியிருந்தார். தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டும் கடிதம் தலைமைச் செயலாளரால் பிப்ரவரி 2024ல் எழுதப்பட்டுள்ளது. அதில், இது குறித்து பள்ளிக் கல்விச் செயலாளர் தலைமையில் அமைக்ககப்பட்டுள்ள குழு ஆலோசித்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம் என்றும், மத்திய அரசு தரவேண்டிய நிதியை உடனடியாகத் தருமாறும் கோரப்பட்டுள்ளது. பின்னர், ஜூலை 2024ல் தமிழ்நாடு அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்ற திருத்தத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தது.

தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. அந்தத் திருத்தத்திற்கு மத்திய அரசு உடன்படவில்லை. இதையடுத்தே ஆகஸ்ட் மாதத்தில் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசு இணையவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டித்தான் முதலமைச்சர் பதில் அளித்திருந்தார்.

கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்குமான கல்விக் கொள்கை உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் சுட்டிக்காட்டப்படும் அம்சங்களில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னேறியிருக்கிறது. எனவே, தனக்கானத் தனித்துவமான கல்விக்கொள்கையை மாற்றிக்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்பதுதான் நிலைப்பாடு. இதற்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உள்ள நிதியை பகிர்வதற்கும் எந்த தொடர்புமில்லை. ஆனாலும், தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது.

பணத்தைக் கொடு என்று கேட்டால், நாகரிகமற்றவர்கள் என்று பேசுகிறார் தர்மேந்திர பிரதான். மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான பணமும் இல்லை. தமிழர்களை மதிக்கும் பண்பும் இல்லை.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article kalpana interview என் பெட்ரூம்ல நடக்குறது… இதுதான் பச்சையான உண்மை! பாடகி கல்பனா வேதனை
Next Article illayaraja bg அது சிம்பொனியே இல்ல

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?