மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து தனது சொந்த தொகுதி பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றபோது தரையிறங்கும் நிலையில் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி ஓடியதில் உடைந்து சிதறியது. இதில் அஜித் பவாருடன் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர்.
விமானம் தீப்பற்றி எரிந்து கருகியதில் 6 பேரின் உடல்களும் கருகின. இதனால் உயிரிழந்தோரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது. இதில் அஜித் பவாரின் உடலை அவரது கைக்கடிகாரம் அடையாளம் காட்டியது.




