தமிழகத்தையே உலுக்கி எடுத்தது விளாத்திக்குளம் பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்த கதி. சம்பவம் நடந்து 76 நாள் ஆகும் நிலையில் அந்த வழக்கில் இன்று தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 71 சாட்கள், 2 தடயவியல் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதை உறுதி செய்தது. ஆகவே, தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தர்ம முனீஸ்வரன் யார்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன். ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2020ல் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று விளாத்திக்குளம் அடுத்த கீழ ஈரால் பகுதியில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 2022ல் தர்மமுனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடந்த டிசம்பர் 18ல் நிபந்தனை ஜாமீனில் வந்தார் தர்ம முனீஸ்வரன். நிபந்தனையின் படி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

விளாத்திக்குளம் மாணவி படுகொலை:
கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு காட்டுப்பகுதி வழியாக பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். விளாத்திக்குளத்தில் பெண்கள் இரவில் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு செல்வதை நோட்டார். கும்பலாக வராமல் தனியாக வரும் பெண்ணுக்காக காத்திருந்தார். 17 வயது மாணவி தனியாக வந்ததும் மறைந்து நின்ற தர்ம முனீஸ்வரன், அந்த மாணவியின் நெற்றியில் கட்டையால் கடுமையாக தாக்கினான். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார் தர்ம முனீஸ்வரன்.
அந்த நேரத்தில் நெடு நேரம் ஆகியும் மகளை காணவில்லையே என்று பெற்றோர் லைட் அடித்துக்கொண்டு தேடி வந்தார்கள். அவர்கள் வருவதை அறிந்ததும் மாணவி சத்தம் போடாமல் இருக்க அவரின் வாயை இறுக பொத்திக் கொண்டான் தர்ம முனீஸ்வரன். பெற்றோர் சென்றதும் மாணவியின் வயிற்றில் ஆவேசமாக பலமுறை மிதித்தான். பின்னர் நெஞ்சில் ஏறி அமர்ந்துகொண்டு குத்தினான்.

மாணவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். மகளை காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மறுநாள் காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
தர்ம முனீஸ்வரன் கைது:
குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி பெற்றோர், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். காட்டுப்பகுதியில் நின்ற பைக்கை கைப்பற்றி விசாரித்தபோது அது ராமநாதபுரம் பார்த்திபனூரில் உள்ள ஒருவரின் பைக் என்றும், அது திருடு போனதும் தெரியந்தது.
தீவிர தேடுதலில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காற்றாலை கண்காணிப்பு கேமராவில் வாலிபர் அந்த பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. வழக்கம் போல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி வந்தபோது போலீசார் பிடித்தனர். அவர்தான் தர்ம முனீஸ்வரன். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றவாளி:
சம்பவம் நடந்த 76 வது நாளில் இன்று தர்மமூனிஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குக்டி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உறுதி செய்தது. 71 சாட்கள், 2 தடயவியல் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதை உறுதி செய்தது. இதையடுத்து தர்ம மூனிஸ்வரனுக்கான தண்டனை அறிவிக்கிறது நீதிமன்றம்.



