சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற பிரபல நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் லிமிடெடின் (Eternal Ltd) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) தீபிந்தர் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவருடைய CEO பதவி பிப்ரவரி 1, 2026 முதல் நிறைவு பெறுகிறது. ஆனால் அவர் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இயக்குநராகவும் தொடர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தான் புதிய சவாலான யோசனைகளை ஆராய விரும்புவதாகவும், பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மேலாண்மையில் அந்த முயற்சிகளை செய்வது கடினம் என்றும் அதனால் தான் CEO பதவி விட்டு வெளியேறுகிறேன் என்றும் ஆனால் நிறுவன வளர்ச்சிக்கு தான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிளிங்கிட் நிறுவனத்தை அத்துடன் வளர்த்து வந்த CEO அல்பிந்தர் திண்ட்ஸா (Alpinder Dhindsa) , எடர்னல் நிறுவனத்தின் புதிய CEO ஆக பெப்ரவரி 1 முதல் பொறுப்பேற்பார் என்று அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.



