திராவிட மாடல் அரசின் சாதனைத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டம் 13 மாநிலங்கள் மற்றும் 2 ஒன்றிய பிரதேசங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இத்திட்டம் பின்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

திராவிட மாடல் அரசின் இந்த திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது மேற்கு வங்கம், அசாம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஒடிசா, பிஹார் மாநிலங்களிலும், டெல்லி மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.
தற்போது பஞ்சா மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.