கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ’தர்மன்’ படத்தின் விழா இன்று நடந்தது. இவ்விழாவில் ரஜினி பேசும் போது, ’’நான் பேசினாலே பிராப்ளம் தான். ஒன்று எனக்கு பிராப்ளம் வரும். இன்னொன்று என்னால் நான் பேசுவதால் பிறருக்கு ப்ராப்ளம் வரும்.
நான் பேசாமல் இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேங்கிறாரு வாயில என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா என்று கலாட்டா செய்வார்கள், கிண்டல் செய்வார்கள். பேசினால் … இப்ப பேசு என்று சொல்வார்கள் . மற்றவர்கள், இவர் பேசியிருக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். என்ன பண்ணுவது ரொம்ப நாள் கழித்து ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. அதே மாதிரி நம்மை பிடித்தவர்களுக்கு நாம் எது செஞ்சாலும் எது பேசினாலும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையா இருக்கணும்.

முதலில் இந்தப் படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தார். அடுத்து இந்த படத்திற்கு சுந்தர்- சி வந்தார். அவர் பிசியினால் அப்படத்திலிருந்து விலகி விட்டார். அதன் பின்னர் சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்தார். அந்த கதை ரொம்ப சென்சிட்டிவான கதை. அதனால் ரொம்ப ஜாக்கிரதையாக கையாள வேண்டியது அவசியமாக இருந்துச்சு.

அதனால அந்தப் படத்தை தற்போது ஒத்தி வைத்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அவர் பண்ணுன டிராகன் படம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. அந்த படம் என்டர்டெய்னர் மட்டுமல்லாமல் படத்துல நல்ல மெசேஜ் இருந்துச்சு. கமல்ஹாசன் எனக்கு எவ்வளவோ என்கரேஜ் செஞ்சிருக்கார். அதுக்காக அவருக்கு இந்த படம் பண்றேன்’’என்று மனம் திறந்தார்.