அதிமுகவில் முக்கியமானவர்கள் பிரிந்து திமுக, தவெகவுக்கு சென்றுவிட்டார்கள். இப்போது தவெகவில் இணைந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 12 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி. இந்நிலையில் அதிமுக தொண்டனின் குரல் என்று அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
’’நான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவன் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்தல்களை வைத்து சொல்லுகிறேன்.
எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.

அதிமுகவுக்கு கூடிய விரைவில் ஒரு புது தலைமை தேவை. குறிப்பாக சினிமா உலகில் இருந்து மக்களை கவர்ச்சியால் அழகால் ஓட்டுகளை வாங்கும் நபர்.
இப்போ உள்ள சூழ்நிலையில் அதிமுகவின் பிரிந்தவர்கள் அனைத்து தரப்பினரும் ஒன்றாக சேர்ந்தாலும் அதிமுக தேறாது.
என் நண்பர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்பு சொன்னது போல 1977- 1979 ஜனதா கட்சி ஆண்ட போது மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜ் நாராயணன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் இவர்களுக்குள் அடித்து கொண்டு ஆட்சி மற்றும் கட்சியை விட்டது போல, அதிமுக வின் மேல்மட்ட தலைவர்கள் கட்சியை பிடிக்க அடித்து கொண்டு ஆட்சியை பறி கொடுத்து, இன்று கட்சியும் அழிந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமியை மாற்றி புது தலைமை தாங்க யார் என்பதை அறிந்து ஆக்ஷனில் இறங்க வேண்டும்.

இப்படியே போனால் எடப்பாடி பழனிசாமி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் போல் கட்சி மட்டும் வைத்து நடத்தி கொண்டு இருப்பார். ஆட்சி ஜீரோ தான்.
இப்போதைக்கு பாமக உம் பிஜேபி ம் அதிமுக வை தாங்கி பிடித்து கொண்டு இருக்கிறது. இல்லாவிட்டால் இன்றைய அதிமுக வின் மார்க் 15% தான்.’’