திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் அதிருப்தியில் இருந்து அப்பட நிறுவனம் கேவிஎன், தற்போது அப்படம் இணையங்களில் லீக் ஆகி இருப்பதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேவிஎன் எச்சரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஜனநாயகன் படம் இணையங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யவதையும், பகிர்வதை தடுக்கவும் தொழில்நுட்ப ரீதியான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது ஜெகதீசன் தலைமையிலான டெக்னிக்கல் டீம். ஆனால் காட்டுத்தீ வேகத்தில் பலரும் பகிர்ந்து வருவதால் விழிபிதுங்கி நிற்கிறது டெக்னிகல் டீம்.
படத்தின் இயக்குநர் எச்.வினோத், இப்படத்தை யாரும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடைசிப்படம் என்பதால் வசூலில் ஒரு முத்திரை பதித்துச் செல்லவேண்டும் என்று கனவு கண்டிருந்தார் விஜய். அந்த கனவு கலைந்து போனதில் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.