அஜித் – த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க குட் பேட் அக்லி என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தோட டிரைலர்ல ’புலி புலி’ சாங் வரும் போது வேற மாதிரி இருக்கும். இந்த பாடலை யாரு பாடியதுனு தேடும் போதுதான் ‘டார்க்கி நாகராஜா’ பற்றி அறிய முடிந்தது. இவர் மலேசியாவை சேர்ந்த ராப் பாடகர். ’அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாலே’ என்ற இவரது ஆல்பம் சாம் ரொம்ப பிரபலம். சசிகுமார் நடத்த குட்டிப்புலி திரைப்படத்தில் கூட இந்த பாடலை ரீமேக் செய்திருப்பார்கள்.
அது மட்டும் இல்லாம, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல, பா.ரஞ்சித் இயக்கத்துல வெளியான கபாலி படத்துல ’உலகம் ஒருவனுக்கா’ என்ற பாடலை டார்க்கி நாகராஜ் தான் பாடி இருப்பார். அந்த பாடல் காட்சியிலும் அவரை பார்க்கலாம். கபாலி பாடலை போலவே ‘புலி புலி’ பாடலும் ஒரு ஹைப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புலி புலி பாடலும் நாகராஜின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்தான். இதனை குட் பேட் அக்லி திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது திரைப்படத்திற்கு பொருத்தமாக இருக்குமென நாகராஜை மீண்டும் பாட வைத்துள்ளார். இந்த சாங் படத்தில் எப்படி இருக்க போகிறது, அதோட விசுவல்ஸ் எப்படி இருக்கப் போகிறது என அஜித் ரசிகர் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.