திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
வழக்கமான ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் மற்றும் மிகவும் சிக்கலான விண்வெளி பயணங்களை மேற்கொள்ள உதவும் கிரையோஜெனிக் இஞ்ஜினை இஸ்ரோ சோதித்துள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் ப்ரோபல்ஷன் காம்ப்ளக்ஸில், கிரையோஜெனிக் இஞ்ஜினை சாதாரண சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (Ambient Contions) சோதித்து வெற்றிகண்டுள்ளது.
திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்ஸிஜன் போன்ற அதீத குளிரூட்டப்பட்ட திரவ எரிபொருட்கள் இந்த வகை இஞ்ஜினில் பயன்படுத்துகிறது.
ISRO achieves a major milestone! The C20 cryogenic engine successfully passes a critical test in ambient condition, featuring restart enabling systems—a vital step for future missions 🚀🌌
Link: https://t.co/rvDTB1hrZr pic.twitter.com/mePGyjT95b
— ISRO (@isro) December 12, 2024
ஒரே ராக்கெட்டில் பல செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களின் போது, வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த ஒவ்வொரு முறையும் இஞ்ஜினை Re-start செய்ய இந்த கிரையோஜெனிக் இஞ்ஜின் உதவும்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், கனமான செயற்கைக்கோள்களை ஏவுதல், விண்வெளியில் சுற்றுப்பாதையை சரிசெய்தல், உள்ளிட்டவைகளுக்கு இந்த கிரையோஜெனிக் இஞ்ஜினின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த இஞ்ஜின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் இஸ்ரோவின் ‘Gaganyaan’ திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.
தற்போதைய நிலையில், அதிகபட்சம் 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோவால் விண்ணில் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது