நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் பாடல் ஒன்றை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 1999-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘வாலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சோனா சோனா’ பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து பாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த வீடியோ தற்போது அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இயக்குநர் மற்றும் பாடகர் அருண் ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயனின் நண்பர்கள் உள்ளனர். அந்த வீடியோ கேப்ஷனில் ‘நாங்க கும்பலாக சுத்துவோம், ஐயோ அம்மான்னு கத்துவோம்'”‘ என்ற கானா பாடலின் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயன் ‘சோனா சோனா’ பாடலின் இசையமைப்பாளர் தேவா, பாடகர் ஹரிஹரன் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது