கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ராக்கெட், நாசா விண்வெளி வீரர் ஜானி கிம் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்கள் செர்ஜி ரைஷிகோவ் மற்றும் அலெக்ஸி ஜூப்ரிட்ஸ்கி ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவினரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்றிச் சென்றது
ரஷ்யாவின் ‘SoyuzMS27’ விண்கலம் ஏப்ரல் 8-ம் தேதி கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
இவர்கள் சுமார் 8 மாத காலம் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பரில் அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.