வைரமுத்து – சின்மயி விவகாரம் அவ்வப்போது பேசப்பட்டு வந்த நிலையில், வைரமுத்துவுடன் பழகிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
வைரமுத்து நல்ல கவிஞன்; ஆனால் நல்ல மனுசன் கிடையாது. சின்மயிக்கு நியாயம் கிடைக்கணும் என்று இப்போது குரல் கொடுத்திருக்கிறார் கங்கை அமரன்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது திடீரென்று வைரமுத்து மீது கங்கை அமரன் இப்படி பேசியது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

கங்கை அமரன் சின்மயி விவகாரத்தில் தலையிட்டதால், ‘’மாபெரும் கவிஞர் மகளின் வாழ்க்கை சின்னாபின்னமாகி இருக்கிறது. அதுக்கு காரணம் யார் என்று கங்கை அமரனுக்குத் தெரியாதா? ஒரு பெரிய இசையமைப்பாளரின் தம்பி. அவரைப் பார்த்து பேட்டி எடுப்பதற்காக வந்த பெண்ணையே மயக்கி கூடவே வைத்திருந்தார்’’ என்று பதிலுக்கு போட்டு கங்கை அமரனை விளாசி எடுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் அந்தணன்.

அதுமட்டுமல்ல, ‘’சின்மயி விவகாரத்தை சின்மயி பேசட்டும். அதில் நியாயம் இருக்கிறது. அப்படி அவருக்கு ஆதரவாக பேசுவதென்றால், பைபிளில் சொன்னது மாதிரி உங்களில் யார் யோக்கியவான்? அவன் முதலில் கல் எறியட்டும்! யோக்கியம் இல்லாதவர்கள் பேசுவது கேலிக்கூத்தாக தெரிகிறது’’ என்கிறார்.
சின்மயி விவகாரம் போய் , அந்த கவிஞர் யார்? அந்த தம்பி யார்? என்று இனி கங்கை அமரன் விவகாரம் பெரிதாகும் போல் தெரிகிறது.