அதிமுகவின் சீனியர் தனபாலை ஓரங்கட்டி இருக்கிறார் எடப்பாடி. அதனால் குமுறி வெடிக்கிறார் தனபால். பின்னணி என்ன?
எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக சீனியர் தனபால். தன்னை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று தனபால் குமுறி வெடித்ததும் அவர்கள் எல்லோம் தனபாலுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் விதத்தில் தனபாலை சபாநாயகர் ஆக்கியவர் ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏக்களை பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தவர் தனபால். அந்த நன்றி விசுவாசம் கூட இல்லை எடப்பாடிக்கு என்று தனபால் மகன் லோகேஷ் ஆத்திரப்பட்டிருந்தார்.
ஹார்ட் அட்டாக்கில் அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோதும் வந்து எடப்பாடி பார்க்கவில்லை. சொந்த தொகுதியில் அவிநாசியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கவில்லை. வேறு தொகுதியிலும் போட்டியிட சீட் வழங்கவில்லை என்பதால்தான், ஜெயலலிதாவின் மனசு எடப்பாடிக்கு வரவே வராது என்கிற ரீதியில், அன்று இதே போன்று ஒரு நிலைமையில் தான் இருந்தபோது ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை விளக்குக்கிறார் தனபால்.

’’1988ல், சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த ஜெயலலிதா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார். அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!’’ என்கிறார் தனபால்.

எடப்பாடியின் துரோகம் தெரிய வர ஆரம்பித்ததால்தான் தவெகவில் இணைந்துவிட்டேன் என்கிறார் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். தனக்கு ஆகாத செங்கோட்டையனுடன் தொடர்பு வைத்திருந்ததும், லோகேஷ் தவெகவுக்கு தாவி அதிமுக துரோகம் செய்ததும்தான் தனபால் மீது எடப்பாடிக்கு வெறுப்பு வர காரணாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.



