• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : சொன்னதும்.. செய்ததும்…
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
79%
4 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : சொன்னதும்.. செய்ததும்…

Spark Web Desk
Last updated: 2025-09-05 11:00 am
Spark Web Desk Spark Web Desk 62 Views
Share
mk stalin
SHARE

மக்களுக்கு என்ன செய்வோம், மத்திய அரசிடம் எவற்றை வலியுறுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பது தி.மு.க. முதன்முதலில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட 1957ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது அண்ணா இருந்தார். தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய தேர்தல் அறிக்கையில் இலங்கை, பர்மா, மலேயா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது உள்பட பலவும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் மு.க.ருணாநிதி தலைமையில் தி.மு.க. இயங்கியபோது மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள்-அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை முன்வைத்து தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

1977ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு 2021 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்குமான கால்பந்து போட்டியாகவே இருந்து வந்துள்ளது. பந்து எந்த அணியின் காலுக்கு கிடைக்கிறதோ அந்த அணி லாவகமாக கோல் போடுகிற வகையில், வாக்குறுதிகளை வழங்குவது தொடர்ந்தது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் இலவச கலர் டி.வி., 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து, ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் போன்ற வாக்குறுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அந்தத் தேர்தல் களத்தின் கதாநாயகனாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து  ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க லேப்டாப், ஸ்கூட்டி, செல்போன் என வாக்குறுதிகளை அளித்து 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றது.

தேர்தல் அறிக்கையும் அதில் உள்ள வாக்குறுதிகளும் கட்சிகளின் வெற்றிக்கு உதவுவதுபோலவே, ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீதான செயல்பாடுகள் மீதான சாதக-பாதக விமர்சனங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்தன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் மிக முக்கியமானதாக இருந்தது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். அதுபோலவே பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், மாதந்தோறும் மின் கட்டணக் கணக்கெடுப்பு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உள்ளிட்டவையும் கவனம் பெற்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டம் விடியல் பயணம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு உழைக்கும் பெண்கள்-அலுவலகங்கள் செல்லும் பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களிடம் இருப்பதை அவர்களுடைய சங்கங்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. மாதம் ஒரு முறை மின்கட்டண கணக்கீடு என்பது நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஸ்மார்ட்  மின்மீட்டர் பொருத்தும் பணி நடப்பதால் அது முடிந்ததும் மாதம் ஒரு முறை கணக்கெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது எந்தளவு விரைவாக சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

நீட் நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல ஒரு முறைக்கு இரு முறை தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநர் மற்றும் மத்திய அரசினால் அதற்கு ஆதரவின்றிப் போனதும், நீட் தேர்வு தொடர்வதும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும் நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னவாயிற்று என தி.மு.க.வை நோக்கி கேள்வி எழுப்பும் விநோத அரசியலையும் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டிற்குரிய மத்திய அரசின் நிதிப்பகிர்வு உள்ளிட்ட சவால்களை மாநில அரசு சுட்டிக்காட்டுகிறது. நிதி நெருக்கடியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களும், துறை வாரியான திட்டங்களின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதுடன், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் கட்டமைப்புகளில் தமிழ்நாட்டை முன்னேற்றியுள்ளது.

நிர்வாகத்திறனில் மாநில அரசு தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மக்களிடம் நேரடியாக அதிருப்தி வெளிப்படாத நிலையும் உள்ளது. 505 வாக்குறுதிகளில் ஏறத்தாழ 400 நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர்கள் பேட்டி அளித்துள்ளனர். மீதமுள்ளவற்றில் மக்களின் எதிர்பார்ப்புக்குரியவை நிறைவேறுமா என்பதே தேர்தல் களத்திற்கான கேள்வி.

TAGGED:DMKmk stalintamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ramadoss thailapuram1 கெடு – படம் நீக்கம் : தைலாபுரம் திகுதிகு
Next Article periyar at oxford தலையங்கம் : உலக அரங்கில் தமிழர்களின் தலைவர்

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?