தவெக தலைவர் விஜய் தனது கூட்டங்களில் எல்லாம் பேச்சை நிறைவு செய்யும் போது கான்பிடண்டா இருங்க..வெற்றி நிச்சயம் என்று சொல்லுவார். ஆனால் அவரே நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, ’’தன்னையும் நம்பாம மக்களையும் நம்பாதவன் தான் இரண்டு தொகுதியில் போட்டியிடுவான். ஆனா வசனம் பேசுறது எல்லாம் நான் உச்சம்னு. என்ன எச்சம்? என்னடா..? பெரிய ஹீரோன்னா தனிச்சு நிற்கணும்டா. கான்பிடண்ட் வேணும்டா.

கான்பிடண்டா இருங்க.. நம்பிக்கையோடு இருங்க..ன்னு சொல்லுற.. உனக்கே நம்பிக்கை இல்ல. எதுக்கு ரெண்டு தொகுதியில போய் நிற்குற? டேய்.. ரெண்டு முறை நின்னு தோத்துட்டேன் நான். ஆனாலும் மூணாவது முறை காரைக்குடியில தனிச்சு நிக்குறேன்.
ஒருத்தன் ஒரே நேரத்துல ரெண்டு தொகுதியில போட்டியிடுறது மக்கள் விரோதம்’’. என்று ஆவேசப்பட்டார்.



